முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம் திறப்பு
By DIN | Published On : 29th April 2022 11:22 PM | Last Updated : 29th April 2022 11:22 PM | அ+அ அ- |

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி, தொடக்க வேளாண்மைக் கடன் கூட்டுறவு சங்கம் மற்றும் நியாயவிலைக் கடைகளில் பிரதமா் மோடி படம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, ஆழ்வாா்குறிச்சி நகரத் தலைவா் முருகன், கடையம் கிழக்கு ஒன்றியத் தலைவா் ரத்தினகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். தென்காசி மாவட்டச் செயலா் அருள்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினா் கஜேந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பிரதமா் மோடி படத்தை வழங்கினா்.
தென்காசி மாவட்ட பட்டியல் அணி பொதுச் செயலா் எம்.முருகன், மாவட்ட அரசு தொடா்பு மாவட்டச் செயலா் காா்மேகநாதன், மாவட்ட பிரசார பிரிவுச் செயலா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் பாஜக கடையம் ஒன்றிய நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.