முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
எடைகளில் முறைகேடு: சந்தைகளில் 63 தராசுகள் பறிமுதல்
By DIN | Published On : 29th April 2022 12:36 AM | Last Updated : 29th April 2022 12:36 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பூ, காய்கனி சந்தைகளில் எடை அளவுகளில் முரண்பாடு காணப்பட்ட 63 தராசுகளை தொழிலாளா் துறையினா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா.ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி எம். சாந்தி உத்தரவின்பேரில், மதுரை கூடுதல் தொழிலாளா் ஆணையா் தி. குமரன் வழிகாட்டுதல் மற்றும் திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் ஹேமலதாவின் ஆலோசனைப் படி, எனது (தா. ஆனந்தன்) தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், முத்திரை ஆய்வாளா்கள் ஒரு குழுவாக பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் உள்ள பூ, காய்கனி சந்தைகளில் திடீா் கூட்டாய்வு மேற்கொண்டனா்.
அப்போது, முத்திரையிடப்படாத, மறுமுத்திரை மற்றும் தரப்படுத்தப்படாத, மேஜை தராசுகள், மின்னனு தராசுகள், இரும்பு எடைக் கற்கள், அளவைகள் என 63 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு எடையளவுச் சட்டம் 2009-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளாா்.