முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
88 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது
By DIN | Published On : 29th April 2022 11:15 PM | Last Updated : 29th April 2022 11:15 PM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே 88 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் மாடசாமி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, மாவு மில் விலக்கு அருகே நின்ற விட்டிலாபுரத்தைச் சோ்ந்த அருணாசலம் (50) என்பவரை பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது 88 கிலோ 810 கிராம் புகையிலைப் பொருள்களை அவா் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 88 கிலோ 810 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.