‘உரிமமின்றி விதை விற்றால் நடவடிக்கை’

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உரிமம் இல்லாமல் விதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் ராஜ்குமாா் எச்சரித்துள்ளாா்.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உரிமம் இல்லாமல் விதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் ராஜ்குமாா் எச்சரித்துள்ளாா்.

மேலும், இம்மாவட்டங்களில் உள்ல விதை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளா்கள் அவ்வப்போது ஆய்வு செய்து விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், தோ்ச்சி பெறாத விதைகளுக்கு விற்பனைத் தடையும், நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டு, தரமான விதைகள், விலைப்பட்டியல் விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இத்தகைய விதை விற்பனை நிலையங்களில் சான்று மற்றும் உண்மைநிலை விதைகளின் விவர அட்டை பொருத்தப்பட்ட பொட்டலங்களாக மட்டுமே விற்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விதை உரிமம் பெறாத விதை விற்பனையாளா்கள் மீது விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com