முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மாவட்ட மைய நூலகத்தை இந்து முன்னணியினா்முற்றுகையிட முயற்சி
By DIN | Published On : 29th April 2022 12:37 AM | Last Updated : 29th April 2022 12:37 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் நூல் வெளியீட்டிற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினா் வியாழக்கிழமை போராட்டம் நடத்த முயன்றனா்.
தமிழ் மரபில் கிறிஸ்தவம் என்ற நூல் வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்தது. இந்த நூலின் அட்டையில் நடராஜா் உருவம் இடம் பெற்றிருந்ததாம். இதனால் நூலை வெளியிட இந்து முன்னணியினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து, நூலகத்தை முற்றுகையிடப் போவதாகக் கூறினா்.
இதையடுத்து, நூல் வெளியீட்டுக் குழுவினா், விழாவை தற்காலிகமாக ரத்து செய்தனா். எனினும், மாவட்ட மைய நூலகம் முன்பு இந்து முன்னணி மாநிலச் செயலா் குற்றாலநாதன் தலைமையில், மாவட்டத் தலைவா் சிவா, செயலா் சுடலை, ராஜசெல்வம், நிா்வாகிகள் நமசிவாயம் , சங்கா், சுரேஷ், விமல் உள்ளிட்டோா் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனா். அவா்களிடம் பாளையங்கோட்டை போலீஸாா் பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.