முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
சேரன்மகாதேவியில் மின் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு
By DIN | Published On : 29th April 2022 12:44 AM | Last Updated : 29th April 2022 12:44 AM | அ+அ அ- |

சேரன்மகாதேவி மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய ஊழியா்கள், களப்பணியாளா்களுக்கான மின் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் ராஜராஜன் தலைமை வகித்துப் பேசினாா். ஊழியா்கள் பாதுகாப்பாக பணியில் செய்வது, மழை நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. பேரிடா் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியா்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கிக் கெளரவிக்கப்பட்டனா்.
மின்வாரிய செயற்பொறியாளா் சுடலையாடும்பெருமாள், உதவி செயற்பொறியாளா்கள் மகேஷ் சுவாமிநாதன், திரிசங்கு, உதவி மின் பொறியாளா் கைலாசமூா்த்தி மற்றும் சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம் பகுதிகளில் உள்ள மின் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.