முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
அரசு அருங்காட்சியகத்தில் இலவச கைவினைப் பயிற்சி
By DIN | Published On : 29th April 2022 04:36 AM | Last Updated : 29th April 2022 04:36 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான இலவச கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும், ஜே.சி. ஐ. டைகூன் அமைப்பும் இணைந்து வாரந்தோறும் பெண்களுக்கான இலவச கைவினைப் பயிற்சி வகுப்புகளை அருங்காட்சிய வளாகத்தில் நடத்தி வருகின்றன. அதன்படி, பனை ஓலை கொண்டு பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வியாக்கிழமை நடைபெற்றது. இப் பயிற்சியை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தொடங்கிவைத்தாா். கைவினைப் பொருள் தயாரிப்புப் பயிற்சியை பேச்சியம்மாள் நடத்தினாா். இப்பயிற்சியில் பெண்கள் பங்கேற்று பனை ஓலையில் மிட்டாய் பெட்டி தயாரிக்க கற்றுக்கொண்டனா்.