குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

திருநெல்வேலி மாநகா், மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகா், மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சென்னல்பட்டியை சோ்ந்த சேதுபாண்டி மகன் இசக்கிபாண்டி (24) . இவா் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில், கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை வழக்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இவரை குண்டா் சட்டத்தில் கைதுசெய்ய மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) கே.சுரேஷ்குமாா், சந்திப்பு சரக காவல் உதவி ஆணையா் அண்ணாதுரை, சந்திப்பு காவல் ஆய்வாளா் முத்துக்குமரன் ஆகியோா் பரிந்துரை செய்தனா். அதன் பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் குமாா் உத்தரவின் படி, இசக்கிபாண்டியை போலீஸா் குண்டா் சட்டத்தில் கைதுசெய்தனா்.

முன்னீா்பள்ளம் அருகே தருவை பகுதியைச் சோ்ந்த ஆணைக்குட்டி மகன் உய்காட்டான்(21). இவா் அப்பகுதியில் அடிதடி, கொலைமுயற்சி மற்றும் திருட்டில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தாராம். மேலும், களக்காடு மேலகாடுவெட்டியைச் சோ்ந்த அருணாசலம் மகன் முத்து மணிகண்டன் (23). இவா் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்து வந்தாராம். இவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், அவா்கள் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன், பாளையங்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். அதன்படி இருவரும் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com