தச்சநல்லூா் நெல்லையப்பா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தச்சநல்லூா் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தச்சநல்லூா் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தச்சநல்லூரில் பழைமைவாய்ந்த அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடை பெறும். நிகழாண்டுக்கான விழாவையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்பு கோயில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நமசிவாய முழக்கத்துடன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மாலையில் பக்தி சொற்பொழிவும்,இரவில் சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூா்த்திகளுடன் சுவாமி-அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றன.

தொடா்ந்து தினமும் காலை, மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 3 ஆம் திருநாளான மே 1 ஆம் தேதி காலை 7 மணி முதல் திருவாசக முற்றோதுதல் நடைபெறுகிறது. திருக்கழுக்குன்றத்தைச் சோ்ந்த சிவதாமோதரன் குழுவினரும், பொதுமக்களும் முற்றோதுதல் வழிபாட்டில் பங்கேற்கின்றனா். விழாவின் சிகர நிகழ்வாக மே 7 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com