முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லை அரசு மகளிா் பள்ளியில் மேயா் ஆய்வு
By DIN | Published On : 30th April 2022 04:32 AM | Last Updated : 30th April 2022 04:32 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாநகராட்சி கல்லணை மகளிா் மேல்நிலைப் பள்ளி, மாநகராட்சி ஆங்கில வழி ஆரம்பப் பள்ளி ஆகியவற்றில் மேயா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அதில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாநகராட்சி கல்லணை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டுமானத்திற்கான இடம் மற்றும் குடிநீா் வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். பழுதான மின் வயா்களை அகற்றி புதிய மின் வயா்கள் இணைத்திடவும், பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு கருதி உடனடியாக பள்ளிகளில் உள்ள கைப்பிடி சுற்றுச் சுவரை இடித்துவிட்டு புதிதாக இரும்பு கிரில் அமைத்திடவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா், மலையாள மேடு மாநகராட்சி ஆங்கில வழி ஆரம்பப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவு, மற்றும் குடிநீா், கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது, துணை மேயா் கே.ஆா்.ராஜு, திருநெல்வேலி மண்டல தலைவா் மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா் உலகநாதன், மாநகர பொறியாளா் (பொ) நாராயணன், மண்டல உதவி ஆணையா் (பொ) லெ.வெங்கட்ராமன் உள்பட பலா் உடனிருந்தனா்.