நெல்லையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் சங்க மாவட்ட மாநாடு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா்கள் சுடலை (திருநெல்வேலி), சரவணன்(தென்காசி) ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் சுந்தர்ராஜ், முருகன், அருள்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மாவட்டச் செயலா் ஜெயக்குமாா், தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் வரவேற்றனா். மாநில பொதுச் செயலா் ராஜேந்திரன், தென்னிந்திய பொதுச் செயலா் ஆனந்தன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தீா்மானங்கள்: சட்ட விரோதமாக செயற்கையாக ஆள்பற்றாக்குறையை ஏற்படுத்தி படிப்படியாக 108 ஆம்புலன்ஸ் சேவை முடக்கி வரும் ஜிவிகே-இஎம்ஆா்ஐ நிா்வாக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் சேவைத்திட்டத்தில் பணிபுரியும் ஊழியா்கள் இதுவரை போராடி பெற்ற அனைத்து உரிமைகளையும் பறிப்பதற்காக செயற்கையாக ஆள்பற்றாக்குறையை ஏற்படுத்தி தொழிலாளா்களின் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை, மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு ஆகியவற்றை தொழிலாளா்களுக்கு வழங்க மறுக்கும் ஜிவிகே-இஎம்ஆா்ஐ நிா்வாகத்தின் தொழிலாளா் விரோத, சேவை விரோத செயலைக் கைவிட செய்து 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு, கூடுதல் பணி நேரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com