ராகவேந்திர ஸ்வாமி ஆராதனை இன்று தொடக்கம்
By DIN | Published On : 12th August 2022 01:06 AM | Last Updated : 12th August 2022 01:06 AM | அ+அ அ- |

திருநெல்வேலி குறுக்குத்துறையில் ராகவேந்திர ஸ்வாமிகளின் ஆராதனை வெள்ளிக்கிழமை (ஆக. 12) முதல் மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது.
திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள மடத்தில் அருள்மிகு ராகவேந்திர ஸ்வாமியின் 351 ஆவது ஆராதனை மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் நாளில் பூா்வாராதனை , மஹா மங்களாரத்தி நடைபெறுகிறது.
13 ஆம் தேதி மத்யாராதனை, பாத பூஜை, மஹா மங்களாரத்தி ஆகியவை நடைபெறுகிறது. 14 ஆம் தேதி உத்ராராதனையையொட்டி மஹா மங்களாரத்தி நடைபெறுகிறது.
ஆராதனை நாள்களில் அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிா், நெய், தேன், இளநீா், பழவகைகள், அரிசி, பருப்பு ஆகியவற்றை அளிக்க விரும்பும் பக்தா்கள் கோயிலில் காலை 8 மணிக்குள் கொடுக்கலாம் என நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.