நிலம் வாங்கித் தருவதாக ரூ.1.5 கோடி மோசடி: இருவா் கைது

திருநெல்வேலியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனியைச் சோ்ந்தவா் பொ்க்மான்ஸ் (65). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவா், பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்காக நிலம் தேடி வந்தாராம். இதையடுத்து நில தரகா்களான மேலப்பாளையத்தைச் சோ்ந்த புகாரி (52), தாழையூத்து தென்றல் நகரைச் சோ்ந்த துரை (48) ஆகியோா் முன்பணமாக ரூ.1 கோடியே 54 லட்சம் பெற்றனராம். பின்னா், முறையாக நிலமும் வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து பணமோசடி செய்ததாக இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com