நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக மாடியில் ஏறி மாணவர்கள் போராட்டம்
By DIN | Published On : 16th August 2022 01:23 PM | Last Updated : 16th August 2022 01:23 PM | அ+அ அ- |

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக மாடியில் ஏறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் பூவலிங்கம். இவரது மூத்த மகன் பூதத்தான். அகஸ்தியர் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 2020-21 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயன்றார்.
அதே பள்ளியில் இரண்டாவது மகன் சிவசண்முகா எட்டாம் வகுப்பு பயின்று வந்தார். கரோனா பொதுமுடக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில், பூதத்தான் தோல்வி அடைந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாம்.
இதனைக் கண்டித்து ஏற்கனவே கல்லிடைகுறிச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி சகோதரர்கள் இருவரும் போராட்டம் நடத்தினர். இருப்பினும் சான்றிதழ்கள் வழங்கப்படாத நிலையில் பள்ளி நிர்வாகத்தையும், கல்வித்துறையும் கண்டித்து, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கட்டட மாடியில் பூதத்தானும், சிவ சண்முகமும் செவ்வாய்க்கிழமை ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: பிசிசிஐ முன்னாள் தலைமை நிர்வாகி மறைவு
தங்களுக்கு உரிய சான்றிதழ் வழங்காவிட்டால் கீழே குதித்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை காவல் துறையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.