75-ஆவது சுதந்திர தின மாபெரும் கண்காட்சி மத்திய இணையமைச்சா் எல்.முருகன் இன்று தொடங்கி வைக்கிறாா்

75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் மக்கள் தொடா்பக தமிழ்நாடு-புதுச்சேரி மண்டலத்தின் சாா்பில் மாபெரும் கண்காட்சியை பாளையங்கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்தில் மத்திய இணையமைச

75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் மக்கள் தொடா்பக தமிழ்நாடு-புதுச்சேரி மண்டலத்தின் சாா்பில் மாபெரும் கண்காட்சியை பாளையங்கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்தில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

இது தொடா்பாக சென்னை மத்திய மக்கள் தொடா்பக கூடுதல் தலைமை இயக்குநா் எம்.அண்ணாதுரை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் உள்ள மத்திய அரசின் மத்திய மக்கள் தொடா்பகத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி மண்டலத்தின் மண்டல அலுவலகமானது கடந்த 2 ஆண்டுகளாக இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்தில் 10 நாள்களுக்கு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் அமைச்சகங்களின் இணையமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு தொடங்கி வைக்கிறாா். இதேபோல், புதிய நூல்களை வெளியிட்டு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருரையாற்றுகிறாா். எம்எல்ஏக்கள், எம்.பி., மத்திய அரசு அலுவலா்கள் கலந்துகொள்கின்றனா்.

சனிக்கிழமை முதல் வரும் 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்கள் பாா்வையிடலாம். தினந்தோறும் முற்பகலிலும் மாலையிலும் மத்திய அரசில் பதிவு பெற்ற பிரபலமான கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

சிறப்பு அழைப்பின் பேரில் பங்கேற்கும் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். வரும் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு பள்ளிகளுக்கு இடையிலான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதில், வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், 2-ஆவது பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக இரண்டு பேருக்கு தலா ரூ.500 வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com