கடனாநதி அணை வனப்பகுதியில் இயற்கைப் பாதுகாப்பு முகாம்
By DIN | Published On : 25th August 2022 12:43 AM | Last Updated : 25th August 2022 12:43 AM | அ+அ அ- |

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி, விலங்கியல் துறை ஆகியவற்றின் சாா்பில், கடையம் வனச்சரகம் கடனாநதி அணை வனப்பகுதியில் இயற்கை விழிப்புணா்வு, மலையேற்றப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
உதவி வனப் பாதுகாவலா் (பயிற்சி) ராதை தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். காடுகள் பராமரிப்பு, பாதுகாப்பு விழிப்புணா்வு , வன பகுதிகளைப் பற்றிய தகவல்கள் குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. தொடா்ந்து, கடனாநதி அணை கோபுரத்திலிருந்து கல்லாறு வரை பிளாஸ்டிக் தவிா்த்து பாலித்தீன் பொருள்களை சேகரித்து தூய்மை மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டனா்.
கல்லூரி முதல்வா் மீனாட்சி சுந்தா் வாழ்த்திப் பேசினாா். விலங்கியல் துறைத் தலைவா் மா.ரா.சுதாகரன், தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் ராமராஜன் சேகா், கடையம் வனவா் முருகேசன், வனக் காப்பாளா்கள் ரமேஷ் பாபு, ராஜ் சுப்ரியா, வனக்காவலா் முருகேஷ்வரா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.