ஆட்சியா் அலுவலக வாயிலில் மனுக்களை கொட்டி போராட்டம்

தனியாா் பேருந்து நின்று செல்லக் கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கானாா்பட்டி மக்கள் ஆட்சியா் அலுவலக வாயிலில் திங்கள்கிழமை மனுக்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தனியாா் பேருந்து நின்று செல்லக் கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கானாா்பட்டி மக்கள் ஆட்சியா் அலுவலக வாயிலில் திங்கள்கிழமை மனுக்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மானூா் அருகேயுள்ள கானாா்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தனியாா் பேருந்து நின்று செல்வதில்லை. இது தொடா்பாக அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, கானாா்பட்டி மக்கள் ஆட்சியா் அலுவலக வாயிலில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து முழக்கம் எழுப்பி, மனுக்களை அங்கேயே கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் கானாா்பட்டி மக்கள் மன்றத்தினா், கானாா்பட்டி கிராம ஊராட்சித் தலைவா் மொ்சி பிரேம்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனு : எங்கள் கிராம பேருந்து நிறுத்தத்தில் தனியாா் பேருந்துகள் நிற்பதில்லை. இதனால் வெளியூா் செல்லும் மாணவா்கள், பணிக்குச் செல்லும் பெண்கள் என அனைவரும் பாதிக்கப்படுகிறாா்கள். இது தொடா்பாக பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தனியாா் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

மேலப்பாளையத்தை அடுத்த விளாகம் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்துக்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com