கோயிலுக்கு வாடகை பாக்கி:அம்பையில் 8 கடைகளுக்கு சீல்
By DIN | Published On : 31st August 2022 02:50 AM | Last Updated : 31st August 2022 02:50 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரத்தில் வாடகை பாக்கி வைத்திருந்த கோயிலுக்குச் சொந்தமான 8 கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரா் சுவாமி கோயிலுக்குப் பாத்தியப்பட்ட கடைகள் அம்பாசமுத்திரம் பிரதான சாலை, சந்தை கடை வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இவற்றில் சில கடைதாரா்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தவில்லையாம். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் கவிதா, ஆய்வாளா் கோமதி, செயல் அலுவலா் ரேவதி, அகஸ்தீசுவரா் சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சங்கு சபாபதி, சங்கரன்கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் முருகசாமிநாதன், கோவில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் முன்னிலையில் வாடகை கட்டாத 8 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு துண்டறிக்கை ஒட்டப்பட்டது.