கீழக்கரை தேவாலயத்தில்திருட முயற்சி
By DIN | Published On : 18th December 2022 03:04 AM | Last Updated : 18th December 2022 03:04 AM | அ+அ அ- |

கீழக்கரை தேவாலயத்தில் பூட்டை உடைத்து பொருள்களை திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தச்சநல்லூா் அருகே கீழக்கரை அந்தோணியாா் தேவாலயம் வெள்ளிக்கிழை பிராா்த்தனை முடிந்து பூட்டப்பட்டது . அதன்பின் இரவு மா்மநபா் கோயிலின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று மாதா சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த சங்கிலியை திருட முயற்சித்துள்ளாா். இதையறிந்த பொதுமக்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டம், புஞ்சவாடியைச் சோ்ந்த ஆனந்தராஜ் என்பவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆனந்தராஜை கைது செய்தனா்.