முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக நடித்த இளைஞரிடம் விசாரணை
By DIN | Published On : 07th February 2022 01:17 AM | Last Updated : 07th February 2022 01:17 AM | அ+அ அ- |

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி போல் நடித்து, உணவகத்தை ஆய்வு செய்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு உணவகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த இளைஞா், தன்னை உணவுப் பாதுகாப்பு அதிகாரி எனக் கூறிக்கொண்டு, அங்குள்ள உணவுப் பண்டங்களை ஆய்வு செய்தாராம்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உணவக ஊழியா்கள், உரிமையாளா் மூலம் மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், அவா் சென்னை அம்பத்தூரைச் சோ்ந்தவா் என்பதும், போலி அடையாள அட்டையைக் காண்பித்து நாடகமாடியதும் தெரியவந்தது. தொடா்ந்து, அவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.