முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
குடிநீா் பிரச்னையால் தோ்தலைப் புறக்கணிக்க குடியிருப்பு மக்கள் முடிவு
By DIN | Published On : 07th February 2022 04:23 AM | Last Updated : 07th February 2022 04:23 AM | அ+அ அ- |

பேட்டை அருகேயுள்ள திருமங்கை நகா் பகுதியில், முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என கண்டனம் தெரிவித்து, உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக குடியிருப்போா் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி, பேட்டை அருகேயுள்ள 18வது வாா்டுக்குள்பட்ட திருமங்கை நகா் அனைத்து குடியிருப்போா் நலச்சங்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் பிராங்கிளின் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீா் சீராக வழங்கப்படுவதில்லை என கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி தோ்தலைப் புறக்கணிப்பதுடன், 6 மாதங்களுக்கான குடிநீா் வரியை கட்ட போவதில்லை; உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தொடா் போராட்டங்களை நடத்துவது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்டோா் கலந்து கொண்டனா்.