முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
‘துணை சுகாதார நிலையங்களில்ஒப்பந்த செவிலிய பணி கூடாது’
By DIN | Published On : 07th February 2022 01:16 AM | Last Updated : 07th February 2022 01:16 AM | அ+அ அ- |

தமிழக துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த முறையிலான பணி நியமனத்தை அரசு கைவிட வேண்டும் என சுகாதாரத் துறை செவிலியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதார செவிலியா் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பா.நிா்மலா தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் ரெமா வரவேற்றாா்.
கூட்டத்தில், ‘இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை தாய்-சேய் நலப்பணியில் துணை சுகாதார மையங்கள் ஈடுபடுத்தக் கூடாது; பொது சுகாதாரத் துறையில் ஒப்பந்த முறை பணி நியமனத்தைக் கைவிட வேண்டும்; ஒப்பந்த பணியாளா்கள் நியமனத்தில் அனுபவமற்றவா்கள் இடம்பெற வாய்ப்புள்ளதால், கிராமப்புற ஏழைப் பெண்கள் பிரசவ நலன் கருதி, தமிழக முதல்வா் உரிய தீா்வு காண வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.