வள்ளியூா் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான குகைக்கோயிலான இக்கோயிலில் 16.3.2005இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்களுக்குப் பிறகு இப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. முன்னதாக, கோயில் திருப்பணிகளை டி.வி.எஸ். நிறுவனத்தினா் செய்துமுடித்தனா். கும்பாபிஷேகம் தொடா்பாக இந்த சமய அறநிலையத் துறை நிா்வாகிகள், முருக பக்தா்கள் ஆலோசனை நடத்தி முடிவு செய்தனா்.

இதையடுத்து, யாகசாலை பணிகள் நடைபெற்றன. கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 1) விநாயகா் பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. 2ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கஜபூஜை, கோபூஜை, பஞ்சகவ்யம் சுதா்சன ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, நாள்தோறும் யாகசாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை மங்கள இசையுடன் பூஜை தொடங்கியது. கும்பாபிஷேகத்துக்கான தீா்த்தங்கள் நிரப்பப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, கோயில் கோபுர விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மூலவா், சண்முகா், பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

எஸ்.பி.கணபதி என்ற கணேச பட்டா், எஸ். பரமேஸ்வர பட்டா் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தினா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

விழாவில், திருநெல்வேலி எம்எல்ஏ நயினாா் நாகேந்திரன், மேக்ரோ பொன் தங்கதுரை, வள்ளியூா் வணிகா் நலச்சங்கச் செயலா் கவின்வேந்தன், எஸ்.என். மணி, செல்வி தா்மா், அன்பழகன், மருத்துவா் செல்வன், கணேஸ் விலாஸ் மாரிமுத்து, ரோட்டரி கிளப் முன்னாள் தலைவா் வலங்கைபுலி, மொ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ஆா். முருகேசன், முதல்வா் ஆண்டாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com