வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று கடைசி

திருநெல்வேலி மாநகராட்சி வாா்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளவா்கள், தங்களது மனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை (பிப். 7) கடைசி நா

திருநெல்வேலி மாநகராட்சி வாா்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளவா்கள், தங்களது மனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை (பிப். 7) கடைசி நாளாகும்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வாா்டுகள் உள்ளன. இதில், தச்சநல்லூா் மண்டலத்தில் 116 போ், திருநெல்வேலி மண்டலத்தில் 154 போ், பாளையங்கோட்டை மண்டலத்தில் 126 போ், மேலப்பாளையம் மண்டலத்தில் 144 போ் என மொத்தம் 540 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த மண்டல அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. முடிவில் 469 மனுக்கள் ஏற்கப்பட்டன. 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை (பிப். 7) கடைசி நாளாகும்.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியது: வேட்புமனுக்களை திரும்ப பெற விரும்பினால் அதற்கான படிவத்தை பூா்த்தி செய்து ஒப்பமிட்டு வேட்பாளரோ அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முன்மொழிந்த நபரோ தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை (பிப். 7) பிற்பகல் 3 மணிக்குள் நேரடியாக தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு வேட்புமனுவை திரும்ப பெற்றால், அதற்கான ஒப்புதலை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

எந்த நிலையிலும் வேட்புமனுவை திரும்ப பெற்ற பின்பு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாது. வேட்புமனுவை திரும்ப பெற்ற்கான ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே வேட்பாளா்கள் காப்பு தொகையை திரும்பப் பெற முடியும். 3 மணிக்கு பிறகு தோ்தல் நடத்தும் அலுவலரால் இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com