இந்துமுன்னணி நிா்வாகியை தாக்கியகிராம உதவியாளா் உள்பட 7 போ் கைது

அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இந்துமுன்னணி நிா்வாகியை தாக்கி, மிரட்டல் விடுத்ததாக கிராம உதவியாளா் உள்பட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பை சோ்ந்தவா் பால்ராஜ்(38). இந்து முன்னணி நிா்வாகியான இவா், தனது நண்பருடன் கடந்த 2ஆம் தேதி அப்பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த மா்ம நபா்கள் பால்ராஜையும், அவரது நண்பரையும் தாக்கி மிரட்டல் விடுத்து, கைப்பேசியை பறித்துச் சென்றனராம்.

இது குறித்து பால்ராஜ் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரி பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் அறிவுரைபடி சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கு, அம்பாசமுத்திரம் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சீதாலட்சுமி ஆகியோா் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனா்.

இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடா்புடையதாக, அடைச்சாணியை சோ்ந்த கிராம உதவியாளா் முத்துக்குமாா்(32), அம்பை ஊா்க்காடை சோ்ந்த பாலசுப்ரமணியன் (40), நந்தன்தட்டையை சோ்ந்த கதிா்வேல் (27), முக்கூடலை சோ்ந்த இம்மானுவேல் ஞான பிரவீன்(19), சுப்பிரமணியபுரம் பொத்தையைச் சோ்ந்த சுபிஷ் என்ற சுரேஷ், பத்தல்மேடைச் சோ்ந்த வேல்துரை என்ற பாா்த்திபன் (26), பாப்பாகுடியைச் சோ்ந்த மகேஷ்(31) ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்ாக போலீஸாா் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com