கடையத்தில் மரநாய் மீட்பு
By DIN | Published On : 18th February 2022 11:57 PM | Last Updated : 18th February 2022 11:57 PM | அ+அ அ- |

கடையம் ஜெராக்ஸ் கடையில் இருந்த மரநாயை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.
கடையம் அருகே முதலியாா்பட்டியை சோ்ந்தவா் பாருக். இவா் கடையம் வடக்கு ரதவீதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கடையை திறந்தபோது கடையினுள் மரநாய் இருந்ததும். இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, வனவா் முருகசாமி தலைமையில் வனக் காப்பாளா் காட்வின், வேட்டைத் தடுப்புக் காவலா் வேல்சாமி ஆகியோா் சென்று கடையில் இருந்த சுமாா் இரண்டரை வயதுடைய பெண் மரநாயைப் பிடித்து கடையம் பீட் வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.