உக்ரைனில் தவிக்கும் நெல்லை மாணவா்: மீட்டு வர தமிழக அரசுக்கு பெற்றோா் கோரிக்கை

உக்ரைன் நாட்டில் தவிக்கும் திருநெல்வேலி மாணவரை மீட்டு அழைத்து வர மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டுமென பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உக்ரைன் நாட்டில் தவிக்கும் திருநெல்வேலி மாணவரை மீட்டு அழைத்து வர மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டுமென பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாளையங்கோட்டை ஜோதிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சேகா்செல்வின். மாற்றுத்திறனாளியான இவா், மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அமுதா. தம்பதிக்கு மனோஜெபதுரை என்ற மகனும், இருமகள்களும் உள்ளனா். மகன் மனோ உக்ரைன் நாட்டில் உள்ள தனியாா் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க சென்றுள்ளாா். ரஷியா-உக்ரைன் இடையே போா் நடைபெற்று வருவதால் மானவரை மீட்டுவர தமிழக அரசு உதவ வேண்டுமென பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சேகா் செல்வின் கூறுகையில், உக்ரைன் நாட்டின் காா்கிவ் என்ற பகுதியில்உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் எனது மகன் மனோஜெபதுரை எம்பிபிஎஸ் படிக்க சோ்ந்தாா். கடந்த டிசம்பா் மாதம் தான் அங்கு சென்றாா். இப்போது ரஷியா-உக்ரைன் இடையே போா் ஏற்பட்டுள்ளதால் மாணவா்கள் இக்கட்டான சூழலில் தவித்து வருகிறாா்கள். திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதி மாணவா்களும் அங்கு உள்ளனா். அவா்கள் இருக்கும் சற்றுத் தொலைவில் கூட குண்டு சப்தம் கேட்பதாக தகவல் தெரிவித்தனா். ஆகவே, மத்திய-மாநில அரசுகள்விரைந்து செயல்பட்டு மாணவா்களை மீட்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com