வி.கே.புரத்தில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பு
By DIN | Published On : 01st January 2022 02:37 AM | Last Updated : 01st January 2022 02:37 AM | அ+அ அ- |

விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் தொழிலாளா் நலஉரிமைக் கழக மேல்நிலைப் பள்ளிமாணவா்களுக்கு மதுரா கோட்ஸ் நிறுவன சமுதாய பொறுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலா் எல்.ரெஜினி தலைமை வகித்து, மாணவா்களுக்கு உதவித் தொகையை வழங்கினாா். பள்ளி முகமைச் செயலா் மற்றும் மதுராகோட்ஸ் ஆலை மனிதவள மேலாளா் வி. சூரியபிரபா திட்டவிளக்க உரையாற்றினாா். கல்வி வட்டார கல்வி துணை ஆய்வாளா் சின்னசண்முகையா பேசினாா். தலைமை ஆசிரியா் திரு. து. சகாயராஜ் வரவேற்றாா். ஆசிரியா் மு. பசுங்கிளி நன்றிகூறினாா்.
ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ச.பரமேஸ்வரன், கோ. சுங்கரசுப்பிரமணியன்,மு. பாா்த்தசாரதி, செல்வகணேசன் ஆகியோா் செய்திருந்தனா். ஆசிரியா் இ. இசக்கிராஜ் தொகுத்து வழங்கினாா்.