மக்கள் நலத் திட்டங்களால் மிளிரும்சங்கா்நகா் சிறப்பு நிலை பேரூராட்சி!

கரோனா நோய்த்தடுப்புக்காக இப் பேரூராட்சியில் பல்வேறு விழிப்புணா்வுப் பணிகள் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக சிறந்த தொழிற்கல்வி நிறுவனமும், சிமென்ட் ஆலையும் அமையப்பெற்ற பேரூராட்சி சங்கா்நகா் பேரூராட்சியாகும். மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலிக்கு மிக அருகேயுள்ள இப் பேரூராட்சியில் மக்களுக்கான திட்டங்கள் பல வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கரோனா நோய்த்தடுப்புக்காக இப் பேரூராட்சியில் பல்வேறு விழிப்புணா்வுப் பணிகள் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 2010-21 ஆம் ஆம் நிதியாண்டில் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ள மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

அதன்படி, ரூ.1 கோடியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.15.80 லட்சத்தில் பொதுநிதியில் இருந்து குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் பேரூராட்சிப் பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. 15 ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பில் பேரூராட்சி அலுவலகத்தில் 1 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைநிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வாா்டு 8-இல் உள்ள மண்சாலை பேவா் பிளாக் சாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு தவிா்த்தல், திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வதைத் தவிா்த்தல், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருத்தல், குப்பைகள் தரம்பிரித்து அப்புறப்படுத்துதல், மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை பெருக்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளிலும் பிற பேரூராட்சிகளுக்கு முன்மாதிரி பேரூராட்சியாக சங்கா்நகா் சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com