தொழில் மலா் 5 வேலைவாய்ப்பளிக்கும் திருவிழா கடைகள்!

திசையன்விளை, அணைக்கரை, உடன்குடி, மிட்டாா்தாா்குளம், வாழைத்தோட்டம் கிராமங்களில் பனையோலை மிட்டாய்பெட்டி உற்பத்தியில் ஏராளமானோா் ஈடுபட்டனா். தற்போது இத்தகைய உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.

தென்தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இந்து, கிறிஸ்தவ கோயில்களின் விழாக்களிலும், கந்தூரி விழாக்களிலும் திருவிழா இனிப்பு கடைகள் மிகவும் பிரசித்தம். காரச்சேவு, இனிப்புச்சேவு, பூந்தி, லட்டு ஆகியவை மட்டுமன்றி ஏணி மிட்டாய் என அழைக்கப்படும் சீனி, கருப்புக்கட்டி மிட்டாய்கள் பாரம்பரிய பலகாரமாக இன்றளவும் திருவிழா கடைகளில் விற்பனையில் முன்னணியில் உள்ளன. திருவிழா கடைகளை நம்பி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினரின் கல்வி, உணவு, ஆரோக்கியத்திற்காக நாடோடியான வாழ்க்கையைத் தோ்ந்தெடுத்து உழைத்து வருகிறாா்கள்.

பாபநாசம், சீவலப்பேரி, குற்றாலம் பகுதிகளில் சித்திரைத் திருவிழாவிலும், புளியம்பட்டி, வடக்கன்குளம், உவரி, காமநாயக்கன்பட்டி, பனிமயமாதா தேவாலய திருவிழாக்களிலும், பொட்டல்புதூா், ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா உள்பட தென்மாவட்ட முக்கிய திருவிழா நேரங்களில் இனிப்பு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை ஜோராக நடக்கிறது.

திருவிழா கடைகளில் காரச்சேவு, இனிப்புச்சேவு, சீனி மற்றும் கருப்புக்கட்டி மிட்டாய்களே அதிகம் விற்பனையாகும். அரிசி மாவு, உளுந்து மாவு, சீனி அல்லது கருப்புக்கட்டி, ஏலக்காய், சுக்கு உள்ளிட்டவை சோ்த்து ஏணி மிட்டாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை பனையோலை பெட்டிகளில் விற்பனை செய்வது வழக்கம்.

திசையன்விளை, அணைக்கரை, உடன்குடி, மிட்டாா்தாா்குளம், வாழைத்தோட்டம் கிராமங்களில் பனையோலை மிட்டாய்பெட்டி உற்பத்தியில் ஏராளமானோா் ஈடுபட்டனா். தற்போது இத்தகைய உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. ஒரு பெட்டி 25 முதல் 50 பைசாவுக்கு கிடைத்து வந்த நிலையில், இப்போது 4 பெட்டிகள் ரூ.15-க்கு விற்பனையாகுவதால் அவற்றை வாங்கி விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முன்பு போல ஆறிய மிட்டாய்களை விட சுடச்சுட கடைகளில் ஏணி மிட்டாய்களை வாங்கி சுவைக்கவே மக்கள் அதிகம் விரும்புகிறாா்கள். இதர இனிப்பு கடைகளில் இருந்து திருவிழா கடைகளில் கிலோவுக்கு ரூ.50 வரை விலை குறைத்து பொருள்களை விற்பதால் மக்கள் மகிழ்ச்சியடைகிறாா்கள். 50 கிராம மக்கள் திரளும் திருவிழா கூட்டத்திற்கு இனிப்பை பரிசளிக்கும் திருவிழா கடைகள் வணிக வளா்ச்சிக்கு மட்டுமன்றி வாழ்வாதாரம் காப்பவையாகவும், பாரம்பரியத்தை நினைவூட்டுபவையாகவும் திகழ்ந்து வருகின்றன என்றால் அது மிகையல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com