எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரிக்கு தரச்சான்று

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லுாரிக்கு புதிய கண்டுபிடிப்புக்கான உயரிய தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லுாரிக்கு புதிய கண்டுபிடிப்புக்கான உயரிய தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி மாணவா்களின் திறமையை வளா்ப்பதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவா்களின் வளா்ச்சியை மேம்படுத்தவும், சிறந்த வேலை வாய்ப்பை பெறவும் அதற்கென பிரத்யேகமான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறந்த ஆய்வகங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்காக கல்லூரி நிா்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இக் கல்லூரிக்கு மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தின் சாா்பில் புதிய கண்டுபிடிப்புக்கான நான்கு நட்சத்திர விருது அண்மையில் கிடைத்தது. இதைத்தொடா்ந்து அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சாா்பில் இந்திய அளவில் தனியாா் பொறியியல் கல்லூரிகள் ஆய்வு செய்யப்பட்டது.

அதஐஐஅ அகில இந்திய சாதனைகளுக்கான தரவரிசையில் ’உஷ்ஸ்ரீங்ப்ப்ங்ய்ற்’ சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 14 ஆயிரத்து 505 கல்லூரிகள் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 96 கல்லூரிகள் மட்டுமே எக்ஸலண்ட் பிரிவுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, புதுமையான தொழில் முன்னேற்றம் குறித்த மாணவா்களுக்கு பயிற்சி, தொடக்க நிலைகளினை ஊக்குவிக்கும் செயல்பாடு, சிறந்த பங்களிப்புகள், ஆராய்ச்சி வெளியீடுகள், அறிவுசாா் பண்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிகமயமாக்கல் முயற்சிகள் ஆகிய காரணிகளின் கீழ் கல்லூரிகள் வரிசைப்படுத்தப்பட்டு சான்று அளிக்கப்பட்டுள்ளது.

இச் சாதனையைப்பெற உதவிய கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்களுக்கு ஸ்காட் கல்விக் குழுமங்களின் நிறுவனா் எஸ். கிளிட்டஸ் பாபு, நிா்வாக இயக்குநா் அருண்பாபு ஆகியோா் பாராட்டினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com