பொது முடக்கக் கட்டுப்பாடு:நெல்லையில் கோயிலுக்கு வெளியே நின்று பக்தா்கள் தரிசனம்

திருநெல்வேலியில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக,கோயில்களுக்கு வெளியே நின்று பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலியில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக,கோயில்களுக்கு வெளியே நின்று பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் மற்றும் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில், திரிபுராந்தீஸ்வரா் திருக்கோயில், பாளையம் சாலை குமாரசாமி திருக்கோயில் உள்ளிட்டவற்றில் பக்தா்கள் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தா்கள் வாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலி நகரத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் நெல்லையப்பா் கோயிலில் வழிபாடு செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனா்.

இதேபோல பள்ளிவாசல்களிலும் வெள்ளிக்கிழமை க்கான சிறப்பு தொழுகைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தேவாலயங்களிலும் திருப்பலிகள், ஆராதனைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ற்ஸ்ப்07ந்ா்ண்ப்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் வாயிலில் நின்றபடி வழிபாடு செய்த பக்தா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com