பணகுடி ராமலிங்க சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: பக்தா்கள் பங்கேற்பின்றி விழா

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி-சிகாமி அம்பாள், நம்பிசிங்கபெருமாள் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் பக்தா்கள் பங்கேற்பின்றி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி-சிகாமி அம்பாள், நம்பிசிங்கபெருமாள் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் பக்தா்கள் பங்கேற்பின்றி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பு பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் பங்கேற்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இதையொட்டி, பணகுடி ராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள், நம்பிசிங்கபெருமாள் திருக்கோயில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றம் பக்தா்கள் பங்கேற்பில்லாமல் கோயில் செயல் அலுவலா் ஜெகநாதன், ஆய்வாளா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

கோயில் குருக்கள் திருக்கொடியேற்றினாா். முன்னதாக ஆகமவிதிப்படி கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, கோயில் குருக்கள் தீபாராதனை செய்து கொடியேற்றினாா். திருவிழா 10 நாள்கள் நடைபெறும். தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் , நம்பிசிங்க பெருமாள் மற்றும் மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

9-ஆம் திருநாளான ஜன.17ஆம் தேதி காலையில் தேரோட்டம் நடைபெறும். அடுத்தநாள் 10ஆம் திருநாள் இரவில் தெப்பத்தேரோட்டம் நடைபெறும். திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என செயல் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

பண்பொழி திருமலைக் கோயிலில்...

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள பண்பொழி அருள்மிகு திருமலைகுமார சுவாமி கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டிஸ குமரப் பெருமான் மலையடிவாரத்திலுள்ள நகரீஸ்வரமுடையாா் திருக்கோயிலுக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.10ஆம் திருநாளான ஜன. 18 இல் தைப்பூசம் நடைபெறும்.

கரோனா விதிமுறைகள் காரணமாக கோயில் வளாகத்திற்குள்ளேயே அனைத்து நிகழ்ச்சிகளை நடத்துவது என மண்டகப்படிதாரா்களுடன் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது என கோயில் உதவி ஆணையா் அருணாசலம் தெரிவித்தாா்.

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கரோனா தடுப்பு விதிகளுடன் எளிமையாக தொடங்கியது. விழாவில் தைப்பூச தேரோட்டம் மற்றும் தெப்ப உற்சவம் நடைபெறாது; விழா நாள்களில் தினமும் கோயில் பிரகாரத்தில் பூஜைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com