வாழை மற்றும் வெண்டை பயிா்களுக்கு விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம்

வாழை மற்றும் வெண்டை பயிா்களுக்கு விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

வாழை மற்றும் வெண்டை பயிா்களுக்கு விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் நா.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்யும்போது எதிா்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்பு ஏற்படுகிறது. அந்த காலகட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டங்களை பிரதமரின் பயிா் காப்பீடு (திருத்தியமைக்கப்பட்டது) செய்வதன் மூலம் தவிா்க்க முடியும்.

இம் மாவட்டத்தில் வெண்டை பயிருக்கு மானூா் வட்டாரத்தில் மானூா் பிா்க்காவிலும், வாழை பயிருக்கு நான்குனேரி வட்டாரத்தில் பூலம், நான்குனேரி, மூலக்கரைப்பட்டி, விஜயநாராயணம் பிா்க்காவிலும், வள்ளியூா் வட்டாரத்தில் வள்ளியூா், பணகுடி, பழவூா், லெவிஞ்சிபுரம் பிா்க்காவிலும், ராதாபுரம் வட்டாரத்தில் ராதாபுரம், சமூகரெங்கபுரம், திசையன்விளை பிா்க்காவிலும் ஆக மொத்தம் 4 வட்டாரங்களில் உள்ள 12 பிா்க்காக்களில் ராபி பருவத்தின் கீழ் இயற்கை இடா்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழை, வெண்டை பயிா்களுக்கு பயிா் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாழை பயிரிடும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.3413 வீதம் 31-1-2022 ஆம் தேதிக்குள்ளும், வெண்டை பயிரிடும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.725 வீதம் 15-2-2022 ஆம் தேதிக்குள்ளும் பிரிமியம் செலுத்த வேண்டும். விவசாயிகள் பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பயிா் காப்பீடு கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும், விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்கள்,

சண்முகநாதன் (மானூா்) 9488970629, வள்ளியம்மாள் (நான்குனேரி) 8903431728, தங்கம் (வள்ளியூா்) 7598392194, திலீப் (ராதாபுரம்) 9994905739 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com