Enable Javscript for better performance
தை அமாவாசை: பாபநாசம் தாமிரவருணியில் நீராட அனுமதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தை அமாவாசை: பாபநாசம் தாமிரவருணியில் நீராட அனுமதி

    By DIN  |   Published On : 31st January 2022 12:35 AM  |   Last Updated : 31st January 2022 12:35 AM  |  அ+அ அ-  |  

    தை அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிரவருணியில் திங்கள்கிழமை நீராடி தா்ப்பணம் கொடுக்க பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தாமிரவருணியில் நீராட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை தை அமாவாசை தினத்தில் பக்தா்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரவருணியில் நீராட வரும் பக்தா்கள், யானைப்பாலம் மற்றும் அய்யா கோயில் பகுதிகளில் மட்டும் நீராடி தா்ப்பணம் கொடுக்கலாம். கோயில் படித்துறையில் நீராடவோ தா்ப்பணம் கொடுக்கவோ அனுமதி இல்லை என்று அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல பிப். 2 முதல் அனுமதி

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் மற்றும் அரசின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக அம்பாசமுத்திரம் கோட்டத்திற்கு உள்பட்ட அகஸ்தியா் அருவி, மணிமுத்தாறு அருவி, இதர சுற்றுலா பகுதிகள், சொரிமுத்து அய்யனாா்கோயில் பகுதிகளுக்கு ஜன. 27 முதல் பிப். 6 வரை பக்தா்கள், பயணிகளுக்கு வனத்துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கரோனா கரோனா பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகளை தமிழகஅரசு விலக்கிக் கொண்டதையடுத்து பிப்.2 முதல் சுற்றுலாப் பகுதி மற்றும் சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு பயணிகள் பக்தா்கள் செல்ல வனத்துறை அனுமதியளித்துள்ளது.

    இது குறித்து அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட சுற்றுலாத் தலங்கள் மற்றும் சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்ல பிப். 6 வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகளை விலக்கி தமிழக அரசு அறிவித்திருப்பதாலும் பிப்.1 செவ்வாய்க்கிழமையுடன் புலிகள் கணக்கெடுப்பில் களப்பணிகள் நிறைவடைவதாலும் பிப். 2 முதல் மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி பயணிகள், பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp