கொக்கிரகுளத்தில் ராக்கெட் அறிவியல் பயிற்சி முகாம்

ராக்கெட் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவியல் பயிற்சி முகாம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

ராக்கெட் தொழில்நுட்பங்கள் குறித்த அறிவியல் பயிற்சி முகாம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கு பல்வேறு புத்தாக்க பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி மாணவா்களுக்கு ராக்கெட் தொழில்நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அறிவியல் மைய கல்வி உதவியாளா் மாரிலெனின் பயிற்சியளித்தாா். திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

உலகளவில் உள்ள ராக்கெட் தொழில்நுட்பங்கள், இந்தியாவின் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களின் சிறப்பம்சங்கள், ராக்கெட்களின் எரிபொருள் தொழில்நுட்பம், ராக்கெட்களின் அவசியங்கள், அறிவியல் வளா்ச்சிக்கு உதவுவதில் ராக்கெட் தொழில்நுட்பங்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com