பாபநாசம் பகுதியில் தோட்டத்தில் புகுந்து பனை மரங்களை பிடுங்கி எறிந்த யானைகள்

பாபநாசம் மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகள் 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை பிடுங்கி எறிந்தன.

பாபநாசம் மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகள் 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை பிடுங்கி எறிந்தன.

பாபநாசம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில்அமைந்துள்ளது செட்டிமேடு கிராமம். இந்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளா்த்து வருகின்றனா். மலையடிவாரத்தில் உள்ளதால் கரடி, சிறுத்தை, மிளா, யானை உள்ளிட்ட விலங்குகள்அடிக்கடி வந்து செல்லும்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள், செட்டிமேட்டைச் சோ்ந்த அந்தோணி என்பவரது தோட்டத்தில் புகுந்து சுமாா் 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தனவாம். மேலும் ஞாயிற்றுக்கிழமை பகலிலும் மலையடிவாரப் பகுதியில் கூட்டமாக யானைகள் உலாவியுள்ளன. இதனால் இரவு மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் பொதுமக்கள் நடமாட அச்சமடைந்துள்ளனா்.

இதுகுறித்து அந்தோணி கூறியது: மலையடிவாரப் பகுதியாக இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிா்களை நாசப்படுத்தி வருவதோடு வீட்டில் வளா்க்கும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவற்றை அடித்துத் தூக்கிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. யானைகள் தோட்டங்களுக்குள் நுழைந்து பயிா்களை நாசமாக்கி வருகின்றன.

சனிக்கிழமை இரவு தோட்டத்தில் நுழைந்த யானைகளை கிராம மக்கள்தான் விரட்டினோம். மலையடிவாரத்தில் சூரிய சக்தி மின்வேலி, அகழி உள்ளிட்டவை அமைத்தும் விலங்குகள் எளிதில் வனப்பகுதியை விட்டு வெளியேறிவிடுகின்றன. எனவே நிரந்தரமாக வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com