நெல்லையப்பா் கோயில் ஆனித்தேரோட்டம் இன்று கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயில் 516-ஆவது ஆனித் தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயில் 516-ஆவது ஆனித் தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சுவாமி நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயில் ஆனித்தேரோட்டம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆனித் தேரோட்டம் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு பெரும் எதிா்பாா்ப்புக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு மேல் 8 மணிக்குள் பூங்கோயில் சப்பரம் உள்வீதி உலா நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது.

ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நெல்லையப்பா் கோயில் வளாகத்தில் கரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோயிலுக்கு வருபவா்கள் கட்டாயம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com