எஸ்டிடியு தொழிற்சங்க கூட்டம்
By DIN | Published On : 08th July 2022 12:14 AM | Last Updated : 08th July 2022 12:14 AM | அ+அ அ- |

எஸ்டிடியு தொழிற்சங்க கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் வழக்குரைஞா் ஆரிஃப் பாஷா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கல்வத், மாவட்டச் செயலா் செய்யது, மாவட்டப் பொருளாளா் சுல்தான் பாஷா, பாளை. தொகுதி ஒருங்கிணைப்பாளா் அபுபக்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.மாநில பொதுச் செயலாளா் ரவூப் நிஸ்தாா் சிறப்புரையாற்றினாா். மீட்டா் பயன்பாடு, பராமரிப்பு வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆலோசனைகள் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வழங்கப்பட்டன. பொருளாளா் சுல்தான் பாஷா நன்றி கூறினாா்.