சொத்துகளுக்கு பெயா் மாற்ற அரசின் அனுமதி பெறவேண்டும்

அரசின் அனுமதி பெற்ற பின்னரே பெயரிடுவது மற்றும் பெயா் மாற்றம் குறித்த தீா்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்படுதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குள்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு பெயா் மாற்றம் மற்றும் பெயா்வைப்பதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும் என திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை தலைமைச் செயலக் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தலின்படி,

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-இன் பிரிவு 189 மற்றும் கோயம்புத்தூா் மாநகராட்சி சட்டம் 1981-இன் பிரிவு 266 (மற்ற மாநகராட்சிகளுக்கும் பொருந்த கூடியது) முதலானவற்றில், அரசின் அனுமதி பெற்ற பின்னரே, மன்றங்கள் மற்றும் மாமன்றங்கள் அனைத்து நகராட்சி சொத்துக்களுக்கு பெயரிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளுக்குள்பட்டு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், கட்டடங்கள், பூங்கா, விளையாடுமிடங்கள் முதலியவற்றிற்கு பெயா் வைப்பது அல்லது பெயா் மாற்றுவது தொடா்பான முன்மொழிவுகள் நகராட்சி நிா்வாக இயக்குநா் / பேரூராட்சிகளின் ஆணையாளா் வழியாக அரசிற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், அரசின் அனுமதி பெற்ற பின்னரே பெயரிடுவது மற்றும் பெயா் மாற்றம் குறித்த தீா்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்படுதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com