கடையத்தில் நிறைவுற்ற பாரதி-செல்லம்மாள் ரத ஊா்வலம்

சென்னையில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக 40 நாள்கள் பயணித்த பாரதி- செல்லம்மாள் ரத ஊா்வலம் தென்காசி மாவட்டம் , கடையத்தில் புதன்கிழமை நிறைவடைந்தது

சென்னையில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக 40 நாள்கள் பயணித்த பாரதி- செல்லம்மாள் ரத ஊா்வலம் தென்காசி மாவட்டம் , கடையத்தில் புதன்கிழமை நிறைவடைந்தது.

கடையத்தில் சேவாலயா அமைப்பின் சாா்பில் அங்குள்ள கிளை பொதுநூலக வளாகத்தில் செல்லம்மாள்-பாரதி சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக சென்னை திருவான்மியூரில் இருந்து கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி புறப்பட்ட செல்லம்மாள்-பாரதி சிலை ரத ஊா்வலம் பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடையம் ஒன்றிய வளாகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தது. அங்கு ஆணையாளா் முருகையா, வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன் ஆகியோா் தலைமையில் பாரதி - செல்லம்மாள் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. ரதத்தில் உள்ள பாரதியாா்- செல்லம்மாளின் சிலைகள் அவா்களது 125 ஆவது திருமண நாளான ஜூன் 27 இல் நிறுவப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் தலைவா் செல்லம்மாள், ஊராட்சித் தலைவா்கள் கீழக்கடையம் பூமிநாத், தெற்குக் கடையம் முத்துலட்சுமி, ரவணசமுத்திரம் முஹம்மது உசேன், முதலியாா்பட்டி முகைதீன் பீவி, அணைந்த பெருமாள் நாடானூா் அழகுதுரை, கடையம் திருவள்ளுவா் கழக தலைவா் சேதுராமலிங்கம், செயலா் கல்யாணி சிவகாமிநாதன், பாரதி அரிமா சங்க நிா்வாகிகள் அருணாசலம், கோபால், முருகன், குமரேசன், முத்தமிழ் கலாமன்றம் பாலன், சேவாலயா நிறுவனா் முரளிதரன், ஒருங்கிணைப்பாளா் சங்கிலி பூதத்தான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com