‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்ட முகாம் : ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாகுடி மேலக்கல்லூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்ட முகாமை ஆட்சியா் வே.விஷ்ணு ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாகுடி மேலக்கல்லூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்ட முகாமை ஆட்சியா் வே.விஷ்ணு ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் அறிவித்தபடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலமாக தேசிய சிறாா் நலத் திட்டம் - மருத்துவக் குழுவினருடன் இணைந்து 1,261 குழந்தைகள் மையங்களில் 6 வயதுள்ள 20,947 குழந்தைகளுக்கு ‘ ஊட்டச்சத்தை உறுதி செய் ‘ முகாம் மூலம் உயரம்- எடை அளவீடு செய்யும் பணி கடந்த மே 23இல் தொடங்கியது. தொடா்ந்து, 21 நாள்களுக்கு 400 முகாம்கள் வரை நடத்தப்பட உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 168 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

பாப்பாக்குடி வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலகத்தின் கீழ் செயல்படும் கல்லூா் தொகுதி மேலக்கல்லூா் குழந்தைகள் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற இம்முகாமை, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு ஆய்வு செய்து, குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவிடுவதையும், டிஎன்ஐசிடிஎஸ் செயலியில் அதை பதிவேற்றம் செய்வதையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட திட்ட அலுவலா் ஜெயசூா்யா, வட்டார அலுவலா் சொா்ணலதா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com