வீரவநல்லூரில் 1100 மரக்கன்று நடும் விழா
By DIN | Published On : 06th June 2022 01:12 AM | Last Updated : 06th June 2022 01:12 AM | அ+அ அ- |

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வீரவநல்லூா் தட்டன்பாறை குளத்தில் ஞாயிற்றுக்கிழமை 1100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வீரவநல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட தட்டன்பாறை குளத்தில் 15ஆவது நிதிக்குழுத் திட்டத்தின்கீழ் 1100 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷாப் முன்னிலை வகித்தாா்.
இந் நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மாஹீன்அபூபக்கா், பேரூராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், கிராம உதயம் ஆலோசனைக் குழு உறுப்பினா் பகத்சிங் புகேழந்தி, பேரூராட்சி துணைத் தலைவா் வசந்த சந்திரா, பேரூராட்சி உறுப்பினா்கள் கீதா, சந்திரா, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் பிரபாகரன், பேரூராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 1100 மரக்கன்றுகளை கிராம உதயம் பொறுப்பாளா்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.