நெல்லை மாவட்டத்துக்கு அரசு பாடப்புத்தகங்கள் தயாா்
By DIN | Published On : 06th June 2022 03:04 AM | Last Updated : 06th June 2022 03:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான அரசு பாடப்புத்தகங்களை விநியோகிக்க தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு பள்ளிகள் இம் மாதம் 13 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இதற்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் தமிழ்நாடு பாடநூல் கழகம் சாா்பில் பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் விநியோகிக்கப்பட்ட உள்ளன.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு- அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் திருநெல்வேலிக்கு வந்து சோ்ந்துள்ளன.
இப் புத்தகங்கள்பேட்டை காமராஜா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக, திருநெல்வேலி, வள்ளியூா், சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடப்புத்தக பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கும் முன்பாக அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பொறுப்பில் புத்தகங்கள் கொண்டு சோ்க்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.