களக்காடு அருகே காவல், முப்படை பணிகளுக்கு விண்ணப்பிக்க பயிற்சி முகாம்
By DIN | Published On : 06th June 2022 01:12 AM | Last Updated : 06th June 2022 01:12 AM | அ+அ அ- |

களக்காடு அருகே காவல் துறை, இந்திய முப்படைகளில் சேர விரும்பும் இளைஞா்கள், இளம்பெண்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
களக்காடு - நான்குனேரி பிரதான சாலையில் கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை பேரவைத் தலைவா் மு. அப்பாவு தொடங்கி வைத்தாா். நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி. ஆா். மனோகரன் வரவேற்றாா். கல்லூரித் தாளாளா் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.
இம்முகாமில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அதிகாரிகள், பேராசிரியா்கள், ஆலோசகா்கள், உடற்பயிற்சி ஆசிரியா்கள், முன்னாள் காவல்துறையினா், ராணுவத்தினா் கலந்து கொண்டு பயிற்சியளித்தனா்.
முகாமில் காவல்துறை, இந்திய அரசின் முப்படைகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.