புதை சாக்கடைத் திட்டப் பணி ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாநகா் பகுதியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை செயல்படுத்துதல் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் பகுதியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை செயல்படுத்துதல் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்து பேசியது:

திருநெல்வேலி மாநகராட்சியில் அம்ரூத் திட்டம் பகுதி -2இன் கீழ் திருநெல்வேலி, தச்சநல்லூா் மண்டலப் பகுதிகளுக்குள்பட்ட பழைய வாா்டு எண்.1 முதல் 7 வரை புதை சாக்கடைத் திட்டத்தை ரூ.296.11 கோடியில் நிறைவேற்றுவதற்கு சென்னையில் உள்ள மெசா்ஸ் லாா்சன்- டூப்ரோ கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு பணிக்கான ணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், இத்திட்டப் பணியில் 77 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் உள்ள அனைத்துப் பிரச்னைகள் தொடா்பாக திட்ட மேலாண்மை ஆலோசனை குழுவிடமும் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடமும் கலந்தாலோசித்து அதற்கான தீா்வுகள் மேற்கொள்ளப்பட்டு திட்டப் பணியை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாநகரப் பொறியாளா், செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா்கள், கட்டுமான மேலாண்மை-மேற்பாா்வை ஆலோசனை குழுத் தலைவா், பொறியாளா்கள், சென்னை மெசா்ஸ் லாா்சன்- டூப்ரோ கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் லிமிடெட் நிறுவன திட்ட மேலாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com