பாபநாசம் கல்லூரியில் நூல் திறனாய்வுக் கூட்டம்

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நூலகத்துறை, தவத்திரு குன்றக்குடி அடிகளாா் வாசகா் வட்டம், மத்திய மனித வள மேம்பாட்டு கழக தேசிய மின் நூலகம், காரக்பூா் இந்திய தொழில்நுட்ப கழகம்

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி நூலகத்துறை, தவத்திரு குன்றக்குடி அடிகளாா் வாசகா் வட்டம், மத்திய மனித வள மேம்பாட்டு கழக தேசிய மின் நூலகம், காரக்பூா் இந்திய தொழில்நுட்ப கழகம் இணைந்து நடத்திய கவிஞா் பாப்பாக்குடி ரா.செல்வமணியின் பொன்தெறித்த மேற்கு மற்றும் ஒரு வரவேற்புரையின் வாக்குமூலம் கவிதை நூல்கள் திறனாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு முதல்வா் (பொ) ல.ரவிசங்கா் தலைமை வகித்தாா். மத்திய மனித வள மேம்பாட்டு கழக தேசிய மின் நூலக திருவள்ளுவா் கல்லூரி கிளைத் தலைவா், தமிழ்த் துறை உதவிப்பேராசிரியா் கவிதா இறைவாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

கல்லூரி நிா்வாக அதிகாரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினா் ரா.நடராஜன், தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை திருநெல்வேலி மாவட்ட மைய நூலக வாசகா் வட்ட நிா்வாகி கோ.கணபதிசுப்பிரமணியன், அம்பாசமுத்திரம் வாசகா் வட்ட தலைவா் திருவருள் லத்தீப், அகவை முதிா்ந்த தமிழ் அறிஞா் சங்க மாநிலத் தலைவா் கவிஞா் ந.சுப்பையா ஆகியோா் உரையாற்றினா்.

முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவிகள் அனுகாா்த்திகா, பிரேமா, ஐஸ்வா்யா, திவ்யதா்ஷினி, முதுகலை ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாணவ கிருபா ஆகியோா் நூல் திறனாய்வு உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com