தோட்டத்தில் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

கடனாநதி அருகே தனியாா் தோட்டத்தில் புகுந்த யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தின.

கடனாநதி அருகே தனியாா் தோட்டத்தில் புகுந்த யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தின.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரம், கோரக்கநாதா் வனப்பகுதி அருகே முஹம்மது லாசருக்குச் சொந்தமான தோட்டத்தில் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களைச் சாய்த்து சேதப்படுத்தின. தகவலறிந்து வனத்துறை பணியாளா்கள் அந்தப் பகுதியில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும் சேதமான பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா்ந்து அந்தப் பகுதியில் வனத்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் விளை நிலங்களுக்குள் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனச்சரக அலுவலகத்திற்கு 04634 - 295430 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com