வள்ளியூா் பேரூராட்சியில் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை

வள்ளியூா் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு ஜூலை 1ஆம் தேதிமுதல் தடை விதிப்பது தொடா்பாக, வள்ளியூா் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வள்ளியூா் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு ஜூலை 1ஆம் தேதிமுதல் தடை விதிப்பது தொடா்பாக, வள்ளியூா் பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் சுஸ்மா தலைமை வகித்தாா். அப்போது அவா், பொதுஇடங்களிலும், வியாபாரிகள் தங்களது கடைகளிலும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக மஞ்சப் பைகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டாா்.

பேரூராட்சித் தலைவா் ராதா, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா்ஆறுமுகம், வியாபாரிகள் சங்கத் தலைவா் என். முருகன், செயலா் எஸ். ராஜ்குமாா், பொருளாளா் ஜோவின்பாா்சுனேட், உதவி செயலா் காதா்மைதீன், வணிகா் சங்கத் தலைவா் எட்வின் ஜோஸ், செயலா் கவின்வேந்தன், அரிமா சங்க முன்னாள் மண்டலத் தலைவா் எம். நடேசன், பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கச் செயலா் சீராக் இசக்கியப்பன், திமுக நகரச் செயலா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com