முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நாரணம்மாள்புரத்தில் விளையாட்டுப் போட்டிகள்
By DIN | Published On : 14th March 2022 05:30 AM | Last Updated : 14th March 2022 05:30 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நாரணம்மாள்புரத்தில் விளையாட்டுப் போட்டிகள் ஜோசப் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
பரிசளிப்பு விழாவுக்கு தாழையூத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் தலைமை வகித்தாா். தாழையூத்து காவல் ஆய்வாளா் பத்மநாபபிள்ளை பரிசு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளா், காவலா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.